ATOZ அவசர உதவி- நிஷாந்தன்- மட்டக்களப்பு- 01-07-2016

கேள்வி- நிஷாந்தன்

இடம்- மட்டக்களப்பு

கேள்வி-  வணக்கம் லங்காபுரி.  வேலையற்ற பட்டதாரிகளுக்கு  அரச நியமனம் எப்போது கிடைக்கும்?

பதில்- பட்டதாரிகளின் அரச நியமனம் தொடர்பில் இதுவரையில் ஒரு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை என்பதே உண்மை…இருப்பினும் வேலையற்றப்பட்டதாரிகளில் நிலைமையை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் முடிவுகளின் படி விரைவில் நாடு முழுவதும், ஆசிரியர் நியமனங்கள் மற்றும் அபிவிறுத்தி உத்தியோகஸ்தர் நியமனங்கள் என்பவை கோரப்படவுள்ளமை உறுதி…அதற்கு மேலதிகமாக 8000 பட்டதாரிகளை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய இது நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கமைய குறித்த பட்டதாரிகளில் 8000 பேரை அரச நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரச சேவைக்கு முதற் தடவையாக இவ்வாறான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் அளவில் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகவே இன்னும் மூன்று மாதங்களுக்குள் இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலானோருக்கு அரச நியமனம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இவரை போல நீங்களும் நாடலாம் லங்காபுரி atoz  அவசர உதவியினை

மேலதிக தகவல்களுக்கு….