பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. பொருட்கள் தட்டுப்பாடு அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாள் உடனடியாக அறிவிக்கவும் – அரசு

0
835

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுத் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருட்களை தாராளமாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழலும் இல்லை என்றும் தெரிவித்த அவர் பொருட்களை பதுக்குவது தொடர்பிலும் விலை அதிகரிப்புத் தொடர்பிலும் கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அணைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் இந்த தகவல்களையே வழங்கியுள்ளதாகவும் ஒரு வேளை பண்டங்கள் தட்டுபாடு என கூறும் வியாபாரிகள் அல்லது விலை அதிகமாக விற்கும் வியாபாரிகள் தொடர்பில் உடனடியாக அரசாங்கதின் விலை கட்டுபாட்டு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.