இன்றைய ராசி பலன் – மார்ச் 10,2020

0
807

மேஷம்: 

செயல்களில் ரசனை மிகுந்திருக்கும். குடும்பத்தினரால் பாராட்டப் படுவீர்கள். தொழில் வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் விலகும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணியாளர்களுக்கு உழைப்பிற்கான சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

ரிஷபம்: 

ஒருவர் உதவுவது போல பாசாங்கு செய்வார். சொந்த உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மிதுனம்:

பணிகளை நிறைவேற்ற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை உதவியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். அரசு சார்ந்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்வு தரும்.

கடகம்:

எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும்.

சிம்மம்:

தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். சான்றோர்களின் ஆசி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பை தவறாமல் பின்பற்றவும்.

கன்னி: 

சிறு செயல் பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் கவனத்துடன் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருளை வாங்கி மகிழ்வர்.

துலாம்:

பணிகளில் தகுந்த கவனம் வேண்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். சிக்கனத்தை பின்பற்றுவீர்கள். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சியைத் தரும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

விருச்சிகம்:

செயல்களில் அன்பின் குணம் வெளிப்படும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றத்தை பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு:

குடும்ப பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பளிப்பீர்கள். தொழிலில் நிலுவைப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

மகரம்:

செயல்களில் சிறு தடுமாற்றம் ஏற்படலாம். எதிலும் நிதானத்தை பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிகமாக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகத்தை கடைபிடிப்பது நல்லது.

கும்பம்:

அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த விஷயங்களை பற்றி சொல்ல வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் சரியாகும். அதிக பயன்தராத பொருளை விலைக்கு வாங்குவதை தவிர்க்கவும். உடல்நலம் சீராக இருக்கும்.

மீனம்: 

செயல்களில் கூடுதல் பலன்களை பெறுவீர்கள். திட்டமிட்ட பணிகளால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.