கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி…?

0
51

தேவையான பொருட்கள் :
உளுத்தம்பருப்பு – 1 கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் – 1 கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.
அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான கோஸ் வடை ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here