இந்தியா தேடி வந்த முக்கிய தீவிரவாதி மசூத் அசார் மரணம்… ரகசியம் காப்பது ஏன்?

0
43

ஜெய்ஷி முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை.
புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெய்ஷி முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார்.
இவர், கடந்த 26 ஆம் திகதி இந்திய இராணுவப்படை நடத்திய தாக்குதலில் தீவிரவாத முகாம் தாக்கப்பட்டு அதில் மசூத் தீவிர காயமடைந்ததாக கூறப்பட்டது.இந்நிலையில், மசூர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. மேலும் மசூருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மசூத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மசூத் அசார் தொடர்பான இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசு ரகசியம் காக்கிறது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here