ஐரோப்பாவில் பரவிவரும் அம்மை நோய் – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை…!

0
51

ஐரோப்பாவில் 2018ஆம் ஆண்டில் மண்ணன், மணல்வாரி அல்லது measles என்று அழைக்கப்படும் அம்மை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதிலும் சுமார் 82,596பேருக்கு இந்த அம்மை நோய் ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது 2017ஐ ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாகும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பாவில் அதிக அளவில் சிறுவர்களுக்கு மணல்வாரி அம்மைக்கான தடுப்பூசி போடப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், 2016ஐ ஒப்பிடும்போது மணல்வாரிக்கான தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை 15 மடங்கு குறைவாகும்.

2018 ஆம் ஆண்டு குழந்தைகள் உட்பட 72 பேர் மணல் வாரி அம்மை நோயால் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறையின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்திலும், வேல்ஸிலும் 2018ஆம் ஆண்டு ஜனவரிக்கும் அக்டோபருக்கும் இடையில் 913பேர் மணல் வாரியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017இல் பிரித்தானியாவில் இரண்டு பெரியவர்கள் மணல் வாரியால் உயிரிழந்துள்ளனர். 2018இல் பிரித்தானியாவில் யாரும் உயிரிழக்கவில்லை.

இதற்கிடையில், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை, பயணம் தொடர்பான தடுப்பூசிகள் மட்டும் போட்டால் போதும் என சுற்றுலாப்பயணிகள் எண்ணி விடுகிறார்கள், அதே நேரத்தில் MMR என்னும் முத்தடுப்பு ஊசி போன்ற தடுப்பு ஊசிகளையும் போட்டிருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுவது அவசியம் என சுற்றுலாப்பயணிகளை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here