தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

வீட்டில் இருந்து தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவனை தம்பசிட்டிப் பகுதியில் வைத்து அப்பாச்சி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலவந்தமாக ஏற்றிச் சென்று சுப்பர்மடம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து பிளேட்டினால் வெட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

 

இச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் பருத்தித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

இதில் இன்பருட்டியினைச் சேர்ந்த சேகர் திருராஜ் (வயது 17) என்ற மாணவனே பிளேட்டினால் வெட்டப்பட்டவராவார்.இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அம் மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

Add Comment