நுவரெலியா பகுதியில் சிக்கியது கரும்புலி!

0
14

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தில் வாழமலை பகுதியில் இன்று (26.05.2020) காலை கரும்புலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என நல்லத்தண்ணி வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே குறித்த புலி சிக்கியுள்ளது. இதனால் அதற்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, புலியை பாதுகாப்பாக மீட்பதற்காக மிருக வைத்திய பிரிவினர் உதவி கோரப்பட்டுள்ளது. இதன்படி சம்பவ இடத்துக்கு மிருக வைத்தியர்கள் விரைந்துள்ளனர்.இத்தோட்டத்தில் கரும்புலி நெடுநாளாக நடமாடி வந்துள்ளது.

அத்துடன் நாய், ஆடு, கோழி என்பவற்றை வேட்டையாடி உட்கொண்டுள்ளதுடன், மனிதர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.” இன்னும் சில புலிகள் இருக்கலாம். எனவே, அவற்றிடமிருந்து தம்மையும் கால்நடைகளையும் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கரும்புலி இனம் இலங்கையில் உள்ளதாக இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here