மறந்தும் கூட கோவில்களில் விபூதி வாங்கும் போது இந்த தவறை செய்யாதீங்க

0
39

கோவிலில் விபூதி வாங்கும் போது கண்டிப்பாக சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. விபூதி இடது கையை கீழே வைத்து வலது கையால் வாங்கப்பட வேண்டும்

2. அந்த விபூதி இடது கைக்கு மாற்றக் கூடாது

3. நல்ல சுத்தமான தாளில் மாற்றிக்கொள்ளலாம்

4. விபூதியை கீழே சிந்தக்கூடாது. அப்படி சிதறினால் அவ்விடம் சுத்தம் செய்ய வேண்டும்

5. திருக்கோவிலில் வாங்கிய விபூதியை கொட்டிவிட்டு வரக்கூடாது .

விபூதி நெற்றியில் இடும்போது கவனிக்க வேண்டியது :

1. கிழக்கு ,வடக்கு திசைகளில் நின்றாவாறே விபூதி இட வேண்டும்

2. சிவ நாமங்களான “சிவ சிவ” “ஓம் நமச்சிவாய” “ஒம் சிவாய நமஹ” உச்சரித்தல் நல்லது. உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்து இடுவதும் நல்லதே.

3. விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்பது பொருள் .அப்படியெனில் ஐஸ்வர்யம் நம்முடனிருக்க விபூதி இடுவோம்..

4. வலது கை சுண்டுவிரல், கட்டை விரல் தவிர்த்து ஏனைய விரல்கள்களால் விபூதியை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். இரு புருவ மத்தியில் அம்பாளுக்கு உகந்த குங்குமம் வைத்துக்கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here