தாய் கண்முன்னே கத்தரிக்கோலால் குத்தி கொல்லப்பட்ட 7 வயது சிறுமி! வெளியான பின்னணி

0
24

கனடாவில் 7 வயது சிறுமி அவரின் தாய் கண்முன்னர் கத்தரிக்கோலால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edmonton-ஐ சேர்ந்தவர் David Michael Moss (34). டாட்டூ வரையும் தொழில் செய்து வந்தார். இவர் தனது தோழி Melissa Desrosiers வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த David, Melissa வீட்டு படுக்கைறைக்குள் நுழைந்து அவரின் மூத்த மகள் Bella Rose Desrosiers (7)-ஐ கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து பொலிசார் David-ஐ கைது செய்துள்ளனர்.

இது குறித்து Melissa கூறுகையில், David என் நண்பர் தான். சில தனிப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவரை நான் தான் என் வீட்டுக்கு வர சொன்னேன்.

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டேன். ஆனால் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் என் வீட்டு படுக்கையறைக்குள் புகுந்து என் மகளை கொன்றுவிட்டார் என கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், David எந்தவொரு குற்றப்பின்னணியும் இல்லாதவர். அவர் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் David வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here