அதிர்ச்சி தகவல் : பெண் மருத்துவர்களை தொடந்தும் குறிவைத்த காசி

0
61

நாகர்கோவிலில் பெண்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த இஞைர் காசியைக் குறித்து நாளுக்கு நாள் அதிகமான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி(26). பொறியியல் பட்டதாரியான இவர் சமூகவலைத்தளங்கள் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளார்.

தன்னை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களை இவ்வாறு மிரட்டி வருவதை அறிந்த குறித்த பெண் மருத்துவர் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

பின்பு காசியைக் கைது செய்த பொலிசார் அவனிடம் இருந்த மொபைல் போன், கணினி என அனைத்து பறிமுதல் செய்து சோதித்து பார்த்ததில், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவாகியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் காசி பேசிய ஆடியோ ஒன்று லீக் ஆகி பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது. தற்போது காசியைக் குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஏற்கெனவே ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்திருந்த நிலையில், மேலும் காசி சொந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெண் டாக்டரையும் ஏமாற்றி உள்ளாராம்.

குறித்த மருத்துவர் ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ மருத்துவத்தில் ஸ்பெஷலிஸ்ட்டாம். குறித்த பெண் மருத்துவருக்கு காசியின் அழகு, அவன் பேச்சு திறமை இதனையெல்லாம் பார்த்து அவரைப் பிடித்துப் போக நெருங்கிப் பழகி உள்ளனர்.

காசியை பலமுறை “ஸ்பெர்ம் டொனேட்” செய்யவும் உரிமையாக கேட்டதையடுத்து, காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார். அதற்கு ஒருமுறை அந்த பெண் டாக்டர், ‘எத்தனை பேர் வயிற்றில் உன் குழந்தை வளருதுனு தெரியுமா”என்று கூறியுள்ளாராம்.

இதைக் கேட்டு காசி உச்சி குளிர்ந்து போய், தன்னுடைய நண்பர்களை எல்லாம் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி “ஸ்பெர்ம் டொனேட்” செய்ய வைத்துள்ளார்.

குறித்த மருத்துவருக்கு காசி செய்த இந்த உதவிக்கு, அப்பெண் மருத்துவர் காசி அழைத்து வரும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளாராம். இவ்வாறு பல தகவல்கள் காசியைப் பற்றி வந்துகொண்டிருந்த நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here