8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நடிகை ஜெனிலியா.. இந்த டாப் ஹீரோவுடன் கைகோர்க்க போகிறாரா?

0
25

தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. பல தமிழ் படங்களில் நடித்துள்ள அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் தனது குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

கவர்ச்சியாக நடித்தாலும், நடிப்புக்கும் , கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன்பிறகு சமீபத்தில் மராத்தி, இந்தி என இரண்டு படங்களில் நட்புக்காக வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் தலைகாட்டினார்.

இந்த நிலையில் தெலுங்கில் அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்க இருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என சொல்லப்படுகிறது. கடந்த வருடம் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

பாகுபலிப பிரபாஸ் நடிப்பில் வெளியான “சாஹோ” படத்தின் இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் ஜெனிலியா நடிக்க இருக்கிறாராம். எனவே, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு திரையுலகம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here