கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோயின்றி வாழ இந்த பொடி போதும்….

0
60

ஒரு நோய்க்கு எளிமையான மருந்து சொன்னாலே மனசு மகிழ்ச்சி அடையும். அதுவே ஒரே மருந்து பல நோய்களுக்கு தீர்வாக இருந்தா… சொல்லுங்க… சொல்லுங்க…. என்கிறீர்களா? சொல்லிடுவோம்.

வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருளே மருந்துதாங்க… அதனால்தான் உணவே மருந்து… என்று முன்னோர்கள் சொல்லியிருக்காங். நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவே அவர்களுக்கு மருந்துபோல் இருந்தது. ஆனால் இப்போ… நம்ம உணவு முறையே மாறிடுச்சே… மதியத்தில் உணவுக்கு பதிலாக பர்கரும், பீட்சாவும் உள்ளே தள்ளுகிறோம். சரி அது என்ன மருந்துன்னு பார்ப்போமா!

வெந்தயம் கால்கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் இதை தனித்தனியாக சுத்தம் செய்து ஒரு வாணலியில் போட்டு கருகாமல் வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்க… இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வாருங்க… இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினமும் இப்படி செய்து வந்தால் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிடும். இதனால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்குகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குகிறது. உடலில் உறுதியும், தேகத்தில் மினுமினுப்பும், சுறுசுறுப்பும் ஏற்படுகிறது.

எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.ஈறுகளில் உள்ள பிரச்னைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் உங்கள் உடம்பை விட்டே ஓடி விடும். இப்படி பல வியாதிகளுக்கு ஒரே தீர்வாக அமைகிறது. என்னங்க எங்கே போறீங்க… சரி… சரி… வெந்தயம் வாங்க போறீங்களா!!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here