தொடை இடுக்குகளில் ஏற்படும் அரி ப் பு குணமாக….கருமை நீங்க – Video

0
67

இன்றுள்ள காலத்தில் ஆண் – பெண் இருபாலரும் இன்றுள்ள காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். இறுக்கமான ஆடைகளை அணியும் சமயத்தில்., ஆடைகள் நமது சருமத்துடன் உராய்ந்து அரிப்பு., எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதுஒருபுறமிருக்க தாம்பத்தியத்தின் போது ஏற்படும் உராய்வின் காரணமாகவும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

தினமும் நாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உராய்வை ஏற்படுத்தும் போது ஏற்படும் பாதிப்பானது ஷேப்பிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலின் காரணமாக அரிப்பு., எரிச்சல் மற்றும் வலியானது ஏற்படும். இந்த பிரச்சனை தொடை இடுக்கு பகுதி., அக்குள் பகுதி., மார்பக காம்பு பகுதி அரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்த பிரச்சனைகளை நாம் சரியான முறையில் கவனித்து சரி செய்துகொள்வது நல்லது.

இந்த தொந்தரவு சில சமயத்தில் நம்மை சில அசவ்கரியங்களுக்கு உள்ளாக்கி., சிரமத்தை ஏற்படுத்தும். இதற்கான காரணங்களாக தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பு உராய்வு., சுய இன்பம் காணுதல்., இறுக்கமாக அணியும் உள்ளாடைகள்., மாதவிடாய் நாப்கின்கள்., அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்ப்பது., உடற்பருமன்., யோனியில் உள்ள முடிகளை நீக்கும் சிகிச்சை முறையால் ஏற்படும் எரிப்புகள் போன்றவை அரிப்புகளுக்கு காரணமாகிறது.

இதற்கான அறிகுறிகளாக பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலி., சருமத்தில் பிளவுகள்., சிவந்த சருமம்., தோல் உரியது மற்றும் சாதரணமாக தொடும் போதே ஏற்படும் வலி மற்றும் அரிப்புகள் போன்றவை அறிகுறியாக இருக்கும். இந்த பிரச்சனையை தீர்க்க இயற்கைமுறை வைத்தியங்கள் உள்ளன. நமது சருமத்தில் ஏற்படும் பிரச்சனையை தீர்ப்பதற்கு தேங்காய் எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது.

தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு., அழற்சி எதிர்ப்பு தன்மையின் காரணமாக நமக்கு பாதிப்புகள் ஏற்படும் முன்னதாகவே பாதுகாக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் இரண்டு முறை போட்டு வந்தால் யோனியில் ஏற்படும் அரிப்பானது சரியாகும். மஞ்சளில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பொருள் காரணமாக சருமத்தில் இருக்கும் பாதிப்பை அதிகரிக்க விடாமல் குறைக்கிறது.

ஒரு தே.கரண்டி வெண்ணெயுடன் அரை தே.கரண்டி மஞ்சள் பொடியை சேர்த்து பேஸ்ட்டாக மாற்றி பாதிக்கப்பட்ட சருமத்தில் போட்டு வர வேண்டும். இந்த முறையை நாளொன்றுக்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேப்பிலை இயற்கையாகவே பூஞ்சையை எதிர்க்கும் பொருளாகும். இதில் இருக்கும் ஆண்டி பயாடிக் பொருளின் காரணமாக அதிகளவு அழகு சாதன பொருட்கள் தயாரிக்க உதவுகிறது.

யோனியில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய ஒரு கையளவு வேப்பிலையை எடுத்து நசுக்கி பேஸ்ட்டாக மாற்றி., பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் அரிப்பு பிரச்சனை சரியாகும். கற்றாழையின் ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் சரும வடுக்கள்., எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை சரியாகும். இந்த முறையை நாளொன்றுக்கு இரண்டு முறை செய்யலாம்.

அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றை தடுக்க இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து., காற்றோட்டமான ஆடைகளை அணிவது., குளித்த பின்னர் அந்தரங்க பகுதிகளில் இருக்கும் நீரை வெளியேற்றி., பிறப்புறுப்பு பகுதியில் பேபி பவுடர் உபயோகம் செய்தல்., தாம்பத்தியத்தின் போது உராய்வை குறைப்பதற்கு எண்ணெய்களை உபயோகம் செய்தல் மற்றும் ஈரமான துணிகளை அணியாமல் இருப்பது., பிறப்புறுப்பில் இருக்கும் உரோமத்தை நீக்கும் சமயத்தில் கவனமாக இருப்பது போன்றவை யோனியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து தவிர்க்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here