பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்னரும் முதுகுவலி ஏற்படுவது ஏன்?

0
35

சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்னரும் முதுகுவலி வருவதுண்டு. இதற்கு காரணம்  அறுவை சிகிச்சையின்போது போடப்படும் ஊசிகளால்தான் பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் அது தவறு.  கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட அந்த முதுகு வலியின் தொடர்ச்சிதான் பிரசவத்திற்குப் பிறகு வரும் முதுகுவலிக்கும் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இந்த முகுது வலியை தவிர்க்க கீழ் குறிப்பிடப்படுள்ள விடயங்களை பின்பற்றுங்கள்…

  • நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது, அதிக வேலைகள் செய்வது, நீண்ட தூரம் நடப்பது போன்ற உடல் உழைப்புகளை அதிகமாக செய்யும்போதும் முதுகுவலியை அதிகப்படுத்தும்.
  • வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் பலரும் முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்டாயம் மணிக்கு ஒரு முறை 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் இலகுவாகும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் நாற்காலி வயிற்றுக்கு உறுதுணையளிக்கும் விதமாக இருக்க வேண்டும்.
  • கணினியானது நிமிர்ந்து அல்லது எட்டிப் பார்ப்பதுபோல் இருக்கக் கூடாது. அவ்வாறு நிமிர்வதாலும் வலி ஏற்படும்.
  • வெதுவெதுப்பான தண்ணீர் கொண்ட ஹீட் பேடைக் கொண்டு முதுகில் ஒத்தடம் தரலாம்.
  • வீட்டில் இருக்கும் பெண்கள் அமரும்போது முதுகுக்கு பிடிமானம் தரும் குஷன் பேடுகளை வைத்துக்கொள்ளலாம்.
  • வயிற்றுக்கும், முதுகுக்கும் பக்கபலமாக இருக்கும் கர்ப்பகால தலையணைகளை உறங்குவதற்குப் பயன்படுத்தலாம்.
  • எடை தூக்குதலைத் தவிருங்கள். அணியும் காலணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஹீல் இல்லாமல் பாதங்களுக்கு இதமான ஷூ, சமதளத்தில் இருக்கும் காலணிகளை அணியலாம்.
  • இரத்தப்போக்கு, கர்ப்பப்பை உறுதியின்மை போன்ற கர்ப்பகால பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் பிசியோதெரப்பியின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here