மாஸ்க் அணியும் போது பின்பற்ற வேண்டிய சில முக்கிய விடயங்கள்

0
52

கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் நாம் கிருமியை வென்றுவிட்டோம் என்பது அர்த்தமில்லை.

கிருமி தாக்கும் அபாயம் அதிகரித்துதான் வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக விலகலை நாம் மேலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மாஸ்க் அணியும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதை இப்போது பார்ப்போம்:

கிருமிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவே நீங்கள் மாஸ்க் அணிகிறீர்கள். அதனால் அழுக்கு கைகளால் மாஸ்க்கை தொட கூடாது.

முகத்தில் உள்ள மாஸ்க்கை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
முகத்தில் மாஸ்க் அணிவதற்கு முன் முகம் மற்றும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவிய பின் மாஸ்க் அணிய வேண்டும்.

ஒருவேளை மாஸ்க்கை சரி செய்யும் நிலை ஏற்பட்டால், கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் வெளியில் வேலை செய்பவர்களுக்கு இந்த குறிப்பு பொருந்தும்.
வெளியில் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒரு மாஸ்க் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு ஏற்ற அளவில் உங்கள் மூக்கு மற்றும் வாய் பகுதி முற்றிலும் மூடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

லைஸால் போன்ற ரசாயனங்கள் மாஸ்க்கை சேதப்படுத்தலாம். ஆகவே மாஸ்க்கை கிருமிநீக்கம் செய்ய எந்த ஒரு ரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். மாற்றாக ஆல்கஹால் ஸ்ப்ரே மட்டும் பயன்படுத்தலாம்.

இதனைப் பயன்படுத்துவதால் மாஸ்க்கில் ஒட்டியிருக்கும் கிருமிகள் முற்றிலும் கொல்லப்படும். இதனை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் பயன்படுத்தும் போது வழக்கமாக பயன்படுத்தும் டிடர்ஜென்ட் மற்றும் சூடான நீர் கொண்டு மாஸ்க்கை சுத்தம் செய்து நன்றாக உலர வைத்து பின்பு பயன்படுத்த வேண்டும்.

எல்லா மாஸ்க்குகளும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சுவாசிக்கக்கூடிய வகையில் உள்ள துணி கொண்டு பின்பக்கமும், சற்று கடினமான துணி கொண்டு முன் பக்கமும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் வடிகட்டும் செயல்முறை சிறப்பாக இருக்கும்.

அதனால் மாஸ்க் அணிவதற்கு முன் சரியாக பரிசோதித்து அணிய வேண்டும்.
சந்தையில் விற்கப்படும் ப்ராண்ட் மாஸ்க்குகளுக்கு இது பொருந்தும்.

வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் இரண்டு வகை துணி கொண்டு தயாரிக்காத பட்சத்தில் எந்த பக்கம் வேண்டுமானாலும் அணியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here