இது ‘டைனோசர் குட்டி’ இல்ல… ‘செம்மறி ஆட்டு’ குட்டி பாஸ்… கோலியின் ‘அட்டகாச மிமிக்கிரி…’ ‘அனுஷ்கா’ பகிர்ந்த ‘வேடிக்கை வீடியோ…’

0
37

Funny video of Virat Kohli going like a dinosaur

விராட் கோலி டைனோசர் போன்று நடந்து வந்து ஆட்டுக்குட்டி போல் கத்தும் வேடிக்கை வீடியோவை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.

லாக்டவுன் காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் சுவாரஸ்யமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி ஜோடி பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீட்டில் தனிமையில் இருக்கும் இவர்கள் பொழுது போக்க கிரிக்கெட் விளையாடுவது, முடி வெட்டிவிடுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

தற்போது விராட் கோலி டைனோசர் போன்று நடந்து வந்து அதுபோன்று சத்தம் எழுப்பும் வீடியோவை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விராட் கோலி டைனோசர் போன்றே பாவனைகள் செய்வதும் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது.

அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ள இந்த கலகலப்பான வீடியோவை பலர் லைக் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here