இறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழிபாடாகத்தான் நோன்பு திகழ்கிறது

0
17

இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் மகத்தானது அறிவாகும். ஆனால், அறிவை விடவும் மகத்தான ஓர் அருட்கொடை ஒன்று உண்டு. அதுதான் திருக்குர்ஆன். எப்படியெனில் அறிவுக்கும் சரியான வழிகாட்டுதல் குர்ஆனிலிருந்துதான் கிடைக்கிறது. இந்த வழிகாட்டுதல் இல்லையேல் அறிவியலின் அனைத்துத் தொலைநோக்காடிகளையும் நுண்ணோக்காடிகளையும் அடைந்த பின்னும் மனிதன் இருளில்தான் தடுமாறிக் கொண்டிருப் பான். ஆகவே, எந்த மாதத்தில் உலகிற்கு இந்த அருட்கொடை கிடைத்ததோ அந்த மாதம் இறைவனைத் துதி பாடுவதற்கான சிறப்பு மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாபெரும் கொடையின் மதிப்பை, மாண்பை, மாட்சியை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம். நன்றி செலுத்துதல், இறைவாக்கை மேலோங்கச் செய்தல் ஆகிய பணிகளுக்காக இறைவன் நோன்பு எனும் வழிபாட்டைக் கடமையாக்கினான்.

இறையச்சத்துடன் வாழ்வதற்கான சிறப்புப் பயிற்சியும் இதன் மூலம் நமக்குக் கிடைக்கிறது. மேலும் இறைநெறியின் அனைத்து அம்சங்களும் இந்த இறையச்சம் எனும் அடிப்படையைத்தான் சார்ந்து நிற்கின்றன. இறையச்சம் எவருடன் உயிரோட்டத்துடன் திகழ்கிறதோ அவருக்குத்தான் திருமறையிலிருந்து வழிகாட்டுதல் கிடைக்கிறது. அந்த இறையச் சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழி பாடாகத்தான் நோன்பு திகழ்கிறது. இதனால்தான் விவேகமும் கருணையும் நிறைந்த அந்தக் கொடையாளன் திருக்குர்ஆன் அருளிய மாதத்தை நோன்புக் காலமாக நிர்ணயித்தான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் குர்ஆன் ஓர் அருளாக வும் ரமலான் அந்த அருளின் வசந்த காலமாகவும் விளங்குகிறது. அந்த வசந்த காலத்தில் வளரும் பயிர்தான் இறையச்சம். மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here