ரமலான் சிந்தனை: புனித ரமலான் மாதம் மனிதர்களிடையே மனித நேயத்தை உருவாக்கும்

0
20

புனித ரமலான் மாதம் மனிதர்களிடையே மனித நேயத்தை உருவாக்கும் பயிற்சியை அளிக்கிறது. நேர்மையும், மனித நேயமும் முழுமையாக வழங்கப்படும் மாதம் ரமலான் மாதம். 12 மாதங்களில் மிகவும் முக்கிய, புனிதமான மாதமும் ரமலான் மாதமாகும்.

இறை கட்டளைகள் ஐந்தில் நான்கு கட்டளைகளை நிறைவேற்றிட வாய்ப்பு இந்த புனித ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. மனிதர்களின் வாழ்க்கை நெறிகள், மனிதனுக்கு வழிகாட்டவும் வழங்கப்பட்ட திருக்குர் ஆன் இறைவனால் அருளப்பட்டதும் இந்த மாதத்தில் தான். இறை பக்தியின் மூலம் ஒவ்வொரு செயலுக்கும் பல ஆயிரம் மடங்கு பலன்கள் நேரடியாக இறைவன் வழங்குகிறார்.

புனித ரமலான் மாதத்தில் 30 நாள் நோன்பிருந்து, ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் அளிப்பதால் ஏற்படும் பலன்களும் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. நோன்பினால் மனித நேயம் வளர்கிறது. ஏழை, எளியவர்களின் உணர்வுகளை அனைவரும் உணர்ந்து கொள்ள இறைவனால் இம்மாதம் வழங்கப்பட்டுள்ளதால் மனித நேய பயிற்சி பெறுகின்றனர்.

ரமலான் மாதத்தில் செய்யும் தான தர்மங்களால் இசுலாமிய சகோதரர்களுடனும், மாற்று சமய சகோதரர்களுடனும் மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வளர்க்க இறைவன் அருள் புரிகின்றார். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ரமலான் பண்டிகையை கொண்டாடும் இசுலாமிய சகோதரர்களுக்கு ஈத் முபாரக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here