புகையில்லா விறகு அடுப்பு வீட்டில் தயாரிக்கும் முறை ராக்கெட் அடுப்பு

0
51

ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் – இதில் 90% பெண்கள், திறனற்ற சமையல் அடுப்புகள் வெளியிடும் ஆபத்தான நச்சு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கு மூச்சுத்தினறல், நுரையீரல் பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.

சமையலறையில் ஏற்படும் மாசு காரணமாக, சுமார் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவிக்கிறது. திட எரிபொருள்களான விறகு மற்றும் பசுஞ் சாண வரட்டி போன்றவற்றை திறனற்ற சமையல் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனர்.

இதில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மையே உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. சுகாதார சீர்கேடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், விறகு சேகரிக்கவோ, வரட்டி செய்யவோ ஏராளமான நேரமும், முயற்சியும் வீணடிக்கப்படுகிறது.

இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 80 மில்லியன் பேர் சமையலுக்கு பாரம்பரிய எரிபொருள் ஆதாரங்களையே தேர்ந்தெடுப்பதாக ‘2013 எரிசக்தி புள்ளிவிவரம்’ தெரிவிக்கிறது.அதாவது அவர்கள் விறகுகள், கரித்துண்டு, வைக்கோல் மற்றும் வரட்டியை பயன்படுத்துகின்றனர். வீட்டில் மண்ணெண்ணெய் பயன்படுத்துவோர் தன்னுடைய வருமானத்தில் 30 சதவீதத்தை அதற்காக தனியாக ஒதுக்க வேண்டியுள்ளது.

சரி வாருங்கள் புகையில்லா விறகு அடுப்பு வீட்டில் தயாரிக்கும் முறை ராக்கெட் அடுப்பு தயாரிப்பது எப்படி என்பது பற்றி கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக தெரிந்த்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here