சூப்பர் டிப்ஸ்! குதிகால் வெடிப்புக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டுமா?

0
70

குதிகால் வெடிப்பு, சேற்றுப்புண், விரலிடுக்கில் பூஞ்சை தொற்று எல்லாமே கிருமிகளால் வரக்கூடியதே.

குதிகால் வெடிப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதை சரிசெய்ய வேண்டும் இல்லையெனில் அவை அதிகமாகி ஆரோக்கியத்தையும் குலைத்துவிடும்.

அதற்கு முதலில் பாதங்களிலிருந்து கிருமிகளை அகற்ற வேண்டும். அதற்கு வேப்பிலை பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் வேப்பிலையை வைத்து எப்படி குதிகால் வெடிப்பை போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • வேப்பிலை- 3 கைப்பிடி அளவு
  • தண்ணீர் – 2 லிட்டர்
  • ஸ்க்ரப் பிரஷ்
செய்முறை

தண்ணீரை கொதிக்க வைத்து வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

வேப்பிலையின் எசென்ஸ் முழுவதும் நீரில் இறங்கி இருக்கும். அதை அப்படியே இறக்கி சூட்டை ஆறவிடவும்.

மிதமான சூட்டில் கால் பொறுக்கும் சூட்டில் இருந்ததும் அகலமான பேஷனில் ஊற்றி கால்களை அதில் நனைத்தபடி வைக்கவும்.

10 நிமிடங்கள் குறையாமல் கால்கள் வேப்பிலை நீரில் இருக்க வேண்டும். அப்போது பொறுமையாக ஸ்க்ரப் பிரஷ் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்த்து எடுக்கவும்.

10 லிருந்து 20 நிமிடங்கள் வரை இரண்டு கால்களையும் பொறுமையாக தேய்த்து எடுத்து பிறகு மெல்லிய சுத்தமான துணியில் பாதங்களை துடைத்து இலேசாக ஆலிவ் ஆயில் போட வேண்டும்.

இந்த பராமரிப்பை காலை நேரம் தவிர்த்து மாலை அல்லது ஓய்வாக இருக்கும் நேரங்களில் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here