ஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி! மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்?

0
97

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கடந்த 24 ஜனவரி 2020ல் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். 24.01.2020 முதல் 16.1.2023 வரை மகரத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் வக்ரம் பெற ஆரம்பித்த (பின்னோக்கி செல்லுதல்) சனி பகவான் மே 2020 முதல் 29.09.2020 வரை மகர ராசியிலேயே பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறார்.

கிரக பெயர்ச்சியில் மிக அதிகமாக கவனிக்கப்படுவது சனி, குரு, ராகு – கேது பெயர்ச்சி தான்.அப்படி சனி வக்கிர நிலை பெறும் போது எந்தெந்த ராசி நல்ல பலன்கள் பெறப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

குறிப்பாக சனி போன்ற மிக சக்தி வாய்ந்த கிரகம் வக்ரம் பெறும் போது அவரின் பார்வை பலன் எதிராக இருக்கும்.

மிதுனம்

அஷ்டமத்து சனி பலனை அனுபவித்து வரும் மிதுன ராசிக்கு சற்று நம்பிக்கை தரக் கூடிய காலமாக அமையும். பொருளாதாரத்தில் இதுவரை நீடித்து வந்த பிரச்னைகள் மறையக் கூடும். பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியை காணக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். பணப்பிரச்னை, வருவாய் இழப்பு நீங்கி மன நிறைவு தரும் தன வரவு ஏற்படும்.

குடும்பத்திலும், உறவினரிடையே இருந்த கருத்து வேறுபாடு மாறி அன்பு அதிகரிக்கும். பணி இடங்களில் இருந்த பிரச்னை நீங்கும் வாய்ப்பு உருவாகும்.

கடகம்

கண்ட சனி பலனை அனுபவதித்து வரும் கடக ராசியினருக்கு இதுவரை பல படிப்பினை பெற்று தற்போது அது உணர்ந்து நல்ல பலனை பெறுவதற்கான செயலில் இறங்குவீர்கள். சில கடினமான சூழல் உங்களுக்கு படிப்பினை கொடுப்பதாகவும் அமையும். இருப்பினும் அது நல்ல முன்னேற்றத்தை தரக் கூடியதாக அமையும். சனி கண்டிப்பாக உங்களை வழிநடத்தும் விதமாக செயல்படுவார். வாழ்வில் முன்னேற்றத்தை பெறக்கூடிய செயல்களை செய்வதற்கான ஆற்றல், சுறுசுறுப்பைத் தருவார்.

என்ன தான் கடினமான சூழல் இருந்தாலும் உங்களை நீங்கள் நேசிப்பதற்கும், உங்கள் துணை அல்லது காதலன் / காதலியை நேசிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். குடும்பத்திலும், காதலிலும் விட்டுக் கொடுத்துச் செல்ல மன நிம்மதியை தரக் கூடிய பல விஷயங்கள் நடக்கும்.

துலாம்

அர்த்தாஷ்டமச் சனி பலனை அனுபவித்து வரும் துலாம் ராசியினர். சோம்பேறித்தனத்தால் பல வாய்ப்புகளையும், பல காரியங்களில் வெற்றியை இழந்திருப்பீர்கள். ஆனால் இந்த சனி வக்ர காலத்தில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து மீண்டும் சரியான பாதைக்கு திருந்துவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் சற்று முன்னேற்றத்தை உண்டாக்கும் பலன் உண்டு, இருப்பினும் கவனமுடன் செயல்படுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நல்ல ஆதரவு கிடைக்கும். சரியான நேரத்தில் வேலையை முடிக்கும் ஆற்றலும், சுறுசுறுப்பும் கிடைக்கும்.

கும்பம்

ஏழரை சனி தொடங்கியதோடு, விரய சனி பலனை பெற்று வரும் கும்ப ராசியினர் சனி வக்ரமடைவதால் இதுவரை உங்கள் முயற்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகளுக்கான காரணத்தை உணர்ந்து அதை வெற்றி அடையவதற்கான செயலில் இறங்குவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்பு, விலகும். துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். பணத்தை செலவு செய்வதில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் சேமிப்பு சொத்துக்களை வாங்குவதற்கான நற்பலனை தரும்.

மீனம்

இதுவரை ஓரளவு நல்ல பலன் பெற்று வாழ்ந்து வந்தவர்கள் மீனம் ராசியினர். லாப சனியாக இருக்கும் மீன ராசிக்கு இந்த சனி வக்ர பலனும் நல்ல பலன்களை தான் தர உள்ளது. உங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பலன்கள் அமையலாம். சில பிரச்னைகள் தோன்றினாலும் அது உங்களுக்கு படிப்பினை தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு வாழ்வில் பல மகிழ்ச்சி தரக் கூடியதாக அமையும். உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய சில நிகழ்வுகள் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here