உக்கிரமா இருக்கும் சனியின் ஆட்டம் எப்போது ஆரம்பம்? எந்த கிரகம் கோடி நன்மைகளை அள்ளி தரும் தெரியுமா?

0
43

ஜோதிடத்தின் அடிப்படை நவகிரகங்களாகும். ஒருவரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு வைத்து அவர்களுக்கு ஜோதிடத்தில் ஜாதக பலன் சொல்லப்படுகிறது.

அந்த ஜாதக அமைப்பும், நவகிரகங்களின் பார்வை பலனும் சேர்ந்து தான் ஒருவருக்கு நல்ல பலன் அல்லது கெடு பலன்கள் உண்டாகின்றன.நாம் இங்கு ஒவ்வொரு கிரகத்தின் சிறப்பு பலனையும், பொது பலனை அளிக்கக் கூடிய பார்வையும், எந்த கிரகங்கள் எந்த காலத்தில் நமக்கு நல்ல பலனை அளிக்கும் என்பதைப் பார்ப்போம்.

கிரகங்களுக்குரிய பார்வைகள்
எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை பொது பார்வையாக உள்ளது.
சனி பகவானுக்கு 3, 10ம் பார்வைகள் உண்டு.
செவ்வாய் பகவானுக்கு 4 மற்றும் 8 ஆம் பார்வைகளும் உண்டு.
குரு பகவானுக்கு 5 மற்றும் 9 ஆம் பார்வைகளும் உண்டு.
இவைகள் தான் ஜோதிடத்தில் மிக முக்கிய பலனைத் தரக் கூடியது என்பதால் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

கிரகங்கள் பலன் தரும் காலம்
சூரியன் மற்றும் செவ்வாய் – ஆரம்ப காலத்தில் அதிக நல்ல பலன் தரும் கிரகங்கள்.
சந்திரன் மற்றும் புதன் – காலம் முழுவதும் நல்ல பலன் தரும் கிரகங்கள்.
குருவும் மற்றும் சுக்கிரனும் – காலத்தின் மத்தியில் நல்ல பலன் தரும் கிரகங்கள்

சனி மற்றும் ராகு – கேது
பிற்காலத்தில் நல்ல பலன் தரும் கிரகங்கள் (நாம் செய்யக் கூடிய பாவத்திற்கு அந்த பிறவியிலேயே பலனை அனுபவிக்கும் விதத்தில், அவர்களின் கடைசி காலத்தில் சனி, ராகு – கேதுவின் தாக்கம் அமையப்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here