சித்திரா பெளர்ணமி – தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

0
79

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

சித்திரா பெளர்ணமி – சித்திர குப்தன் விரதம் என்று வழிபடுகிறோம்.

அது ஏன் சித்திர குப்தன் என்கிறோம்? அவருக்கு அந்த பெயர் ஏன் உண்டானது?

ஒரு சமயம் ,தனக்கு வேலை அதிகரித்து விட்டது என்று எம தர்மராஜா எம்பெருமானிடம் முறை இட்டார். சரி, பார்வதி தேவியாரிடம் ஆலோசிப்போம் என்று இறைவன் தேவியை நோக்கி சென்றார். சக்தி இல்லாமல் சிவம் ஏது ???

அந்த நேரம் தேவியார் ஒரு படம்/ சித்திரம் ஒன்று வரைந்து கொண்டு இருந்தார்.அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வதியும் அப்படியே செய்தார்.

ரகசியங்களை காக்கும் ஒருவனாகவும் இருக்க வேண்டும். சித்திரம் வரையும் போது உருவம் கொடுக்கப் பட்டதால் சித்திர குப்தன் என்று பெயர் இடப்பட்டார். குப்தன் என்றால் இரகசியம் காப்பவன் என்று பொருள்.

சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.

சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.
.
சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.

பார்வதியார் அந்த சித்திரத்தை வரையும் போது கூடவே எழுதுகோல் , நோட்டுப் புத்தகங்களையும் வரைந்து இருந்தார். ஆகவே அன்பர்களே, இந்த சித்திர குப்த விரத காலத்தில் நீங்கள் யாருக்கும் தானம் கொடுக்க விரும்பினால் வளரும் இளம் மாணாக்கர்களுக்கு மனதார , அவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். நிச்சயம் சித்திரா பெளர்ணமி ,சித்திர குப்த விரத பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here