இலங்கை அமெரிக்காவை விட 6 மடங்கு வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று. ஆபத்தின் அமிஞ்சை விழிம்பில் –

0
304

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் உலகின் ஏனைய நாடுகளை விடவும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் இலங்கையில் கொரோனா பரவும் வேகம் 12.43மூ வீதம் வேகமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

உலகில் கொரோனா வைரஸ் வேகம் 2.33மூ அளவிலேயே காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைரஸ் தீவிரமடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 2.32மூஇ ஸ்பெயின் 1.23மூஇ இத்தாலி 0.88மூஇ பிரான்ஸ் 2.31மூ மற்றும் ஜேர்மன் 0.63மூ ஆகிய வேகத்தில் கொரோனா பரவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொது மக்கள் சுகாதார நடைமுறையைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படாதுவிட்டால் இன்னும் ஒரிரு நாட்களில் ‘கொரோனா’ வைரஸ் பரவல் 3B என்ற நிலைக்கு (சமூகதொற்று) சென்றுவிடும் – என்று  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து, முதல் நான்கு நாட்களில் 100 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் அடுத்த நூறு வருவதற்கு 18 நாட்கள் எடுத்தன. ஆனால், தற்போது இரண்டு, மூன்று நாட்களுக்குள் 100 என்ற எண்ணிக்கை நெருங்கிவிடுகின்றது.

எனவே, நோய் வேகமாக பரவக்கூடிய பாரிய அச்சுறுத்தல் நிலை இருக்கின்றது என்பதை மக்கள் உணரவேண்டும். அரசு மற்றும் சுகாதார அமைச்சு தலையிட்டு எவ்வளவுதான் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்திலேயே வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

எனவே, சமூகஇடைவெளி, சுயபாதுகாப்பு உட்பட சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைபிடித்தால் கட்டங்கட்டமாக இயல்புநிலைக்கு திரும்பகூடியதாக இருக்கும்.” – என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here