இந்த நோன்பு காலத்தில் ஈசியா செய்ய சூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல்

0
55

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1/4 கிலோ
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சிக்கன் மசாலா பொடி – 1/2 டீஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
  • பிறகு அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சிக்கன் மசாலா பொடி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • பின்பு குக்கரை மூடி, மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here