என்ன செய்தாலும் உங்க உதடு சிகப்பழகு பெறவில்லையா? இதை ட்ரை பண்ணி பாருங்க!

0
84

எமது அழகில் உதட்டிற்கும் ஒரு பங்கு உள்ளது. எனவே நாம் முழுமையான அழகு பெற வேண்டும் என்றால் உதடும் அழகாக இருக்க வேண்டும்.

இந்த பதிவில் உதடுகளை பராமரித்து கொள்ள சில எளிய முறைகளை பார்க்கலாம்.

உதடு சிவப்பாக காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். மேலும் உதடு சிவப்பாக மாறும்

உதடு சிவப்பாக முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும்.

உதடு சிவப்பாக மாற்ற, இரவு தூங்கும் முன் வெண்ணெய்யை உதட்டில் தடவி கொள்ளவும். பின்னர் காலை பல் துலக்கும் ப்ரஷ் வைத்து  நன்றாக உதடுகளை தேய்க்கவும். தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக 3 நாள்களில் வித்தியாசம் தெரியும்.

உதடுகளை சிவப்பாக மற்ற வெள்ளரிக்காயை வட்டவடிவில் மெல்லிய துண்டாக வெட்டி கொள்ளவும், பின் வெள்ளரி துண்டை நன்றாக  உதட்டில் தேய்க்கவும். பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க தேன் தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை  தடுக்கபடுவதோடு உதடு சிவப்பாக மாறும்.

கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரினை தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது  பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான  வழி.

அதிக வேஸ்லின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கருப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here