அமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்

0
66

அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  சீன ஆய்வகமான வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, குகையிலிருந்து வெளவால்களை கொண்டு வந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது என்ற விடையத்தை அதிர்வு இணையம் அதாரங்களோடு வீடியோவாக வெளியிட்டு இருந்தது யாவரும் அறிந்த விடையமே. இன் நிலையில்,

வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (தற்போது) பிரபலமற்ற வனவிலங்கு சந்தையில் இருந்து பத்து மைல் தொலைவில் தான் அமைந்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது சீன ஆய்வகங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகள் சோதனைகள் முடிந்தவுடன் பக்கத்தில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது என்று டெய்லி மெயில் கூறி உள்ளது. (இவை அப்புறப்படுத்தவே). ஆனால் அதனைக் கூட வெட்டி விற்றுள்ளார்கள் இந்த சீன வியாபாரிகள் என்கிறார்கள்.

குறித்த சோதனை நிலையத்திற்கு அமெரிக்கா 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ள விடையம் தற்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக வுகான் விஞ்ஞானிகள் உள்ளார்கள். இதில் ஒரு அமெரிக்க விஞ்ஞானியும் அடங்குவதாக கூறப்படுகிறது. இவர் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட உடனே அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். குறித்த ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் வளர்க்கப்பட்டு, அதனை பன்றிகளுக்கு செலுத்தி நோயாளியாக மாற்றி. பின்னர் அந்த பன்றியைக் கொன்று, அதன் குடலை எடுத்து, வேறு பன்றிகளை உண்ண வைத்து பரிசோதனை நடத்தி இருக்கிறார்கள்.

இதில் தான் விபரீதம் வெடித்துள்ளது. பன்றியில் குடலில் ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸ் வேறு பன்றிகளுக்கு பரவி மியூட்டேஷன்(பரிணாம வளர்சி) அடைந்து சக்திவாய்ந்த கொரோனாவாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் பரவல் அமெரிக்க – சீன கூட்டு தயாரிப்பு என்கிறார்கள். ஆனால் இது சீனாவில் பரவியவேளை அமெரிக்கா , மிக மகிழ்சியாக இருந்ததாகவும். அமெரிக்காவுக்கு இது இந்த வேகத்தில் பரவும் என்று அமெரிக்கா சற்றும் எதிர்பார்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது உண்மையில் அமெரிக்காவுக்கு திட்டமிட்டே பரப்பப்பட்டதா ? என்ற பெரும் சந்தேகமும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here