ஆந்தைக்கே இந்த நிலைமையா? 40 நாள் தனிமைபடுத்தலில் ஆந்தை…..

0
73

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் மனிதர்கள் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். உலகநாடுகள் பலவும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிறகின்றன.

மனிதர்களை தாக்கிய கொரோனா தற்போது மிருகங்களையும் தாக்க தொடங்கியுள்ளது.அமெரிக்காவில் வனவிலங்கில் உள்ள புலி ஒன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது.

அதேபோன்று பூனைகளுக்கும் கொரோனா தாக்கும் என தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா பீதியால் ஆந்தை ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் உள்ள கட்டடத்துக்குள் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது.

இந்த ஆந்தை மீட்கப்பட்டு தற்போது 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here