9ம் வகுப்பு மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்!

இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியில் கோவிந்தன் என்ற மாணவன் 9ம் வகுப்பு பயின்றுள்ளான்.
சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன் கோவிந்தனை  அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

இதன் பின்னர் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக திருப்பத்தூர்அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டான்.

அங்கு 40 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனை கடத்தி தீ வைத்து எரித்த 2 பேரை திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் தேடி வருகின்றனர்.