80 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

January 9, 2017 இலங்கை செய்திகள் Leave a comment 983 Views

2016 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 80 மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்படாது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

கோட்ட முறைக்கு அமைவாக கஸ்டப் பிரதேசங்கள் உள்ள மாவட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் சலுகையை அடிப்படையாக கொண்டு தமது மாவட்டத்தில் இல்லாது வேறு மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றி மாணவர்களின் பெறுபேறுகளே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.