7 முறை தற்கொலைக்கு முயற்சி! இறுதியில் நடந்தது என்ன?

7 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து 8வது முறை தற்கொலை செய்துக்கொண்ட 88 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் தொடர்பில் நீர்க்கொழும்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குரன – கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஆர்.எக்னஸ் என்ற வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது பிள்ளைகளுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள போதும் அவை பயனளிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 13ம் திகதி இரவு குறித்த பெண் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.