600 மில்லியன் ரூபாவுக்கு உடைகளை வாங்கிய முன்னாள் ஜனாதிபதி செயலாளர்: 3 வருடங்களுக்கு சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் அனுஷா பெல்பிட்டிய ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் அவர்கள் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை இருவருக்கும் 3 ஒருவட சிறைத் தண்டனையும் 20 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷா பெல்பிட்டிய ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த சில் ஆடை வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே அவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் 600 மில்லியன் ரூபா பணத்தில் சில் ஆடைகளை வாங்கி நாடு முழுவதுமுள்ள விகாரைகளில் சில் சமய சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சில் ஆடைகளை விநியோகித்துள்ளனர்.

இதன் ஊடக அரசாங்கத்தின் பணம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.