6 ஆவது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்த ஐங்கரன் மீடியா சொலூசன்!

6 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கொழும்பில் 10/12/2016  ஐங்கரன் மீடியா சொலூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜா கார்த்திக் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் கலாச்சாரத்தை நிலை நிறுத்தி, தமிழ் பேசும் மக்களை மையப்படுத்தி அவர்களுக்கான தகவல்கள் உடனே சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த விளம்பர நிறுவனமாக ஐங்கரன் மீடியா சொலூஷன் செயற்பட்டு வருகின்றது.

தமிழ் கலைஞர்கள் மத்தியில் உள்ள கலை காலாச்சார விழுமியங்கள், அவர்கள் சார் திறமைகளையும் முன்னிலைப்படுத்தி செய்யப்படும் செயற்பாடுகளுக்கு  தாம் ஆதவளிக்க தயாராக உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் தமிழ் கலைஞர்களின் குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜங்கரன் மீடியா சொலூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடராஜா கார்த்திக் தெரிவித்தார்.