401 கோடி ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய செயலாளரை கைது செய்ய உத்தரவு…!

நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளர் கே.டப்ளியு.ஐய்வன் டி சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு- கோட்டை நீதிமன்றம் திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நில்வளா கங்கை செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 401 கோடி ரூபாவை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.