30 வயதை கடக்கும் ஆண்களா நீங்கள்??? இதை கட்டாயம் படியுங்கள்…!!!

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது.

இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். இன்று நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணனியின் முன்னே மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறோம்.

முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ளவோம்.

உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்களுக்கு முப்பது வயதை தாண்டும் போது எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.

முப்பது வயதுக்கு மேல் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முப்பது வயதில் உடற்பயிற்சிக்கு போதிய கால அவகாசம் இல்லை என்றால் யோகாவில் ஈடுபடுவது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

குடும்ப வாழ்க்கையை வழிநடத்தி செல்லும் ஆண்களுக்கு மனநிலையில் சமநிலையின்மை ஏற்படலாம். யோகா உங்கள் மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்த உதவும்.

ஆண்கள் முப்பதுகளில் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், உங்கள் வாழ்நாள் கடைசி வரை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பெரும்பாலான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

உங்கள் உடலில் ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

உலக அளவில் 15 – 35 வயதுக்குள்ளான ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனே சரி செய்துவிடமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விதைப்பை வலி, கடினமாக உணர்வது, மார்பு வடிவத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள் என கூறப்படுகிறது.

நமது உணவு மற்றும் வேலை முறை மாற்றத்தினால் உடல் வலிமை மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆண்கள் தங்கள் உடல் வலிமை குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.