3 ஆண்டுகள் தனியாகப் போராடி சாலை அமைத்த மனிதர்!

http://onlinerx365.com/blackcialis.html|Buy Online Generic Cialis Black pills January 11, 2017 இந்திய செய்திகள் Leave a comment 341 Views

இந்த விபத்தில் வலது தோள்பட்டை, கால் ஆகியவற்றில் பட்ட அடி காரணமாக வேகமாக சசியால் நடக்க முடியாது.

இதனால் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என மூன்று சக்கர வண்டி கேட்டு கிராம பஞ்சாயத்தில் மனு கொடுத்தார்.

மேலும் தனது வீட்டிற்கு அருகில் சாலை வசதி இல்லையென்பதையும் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

வீட்டிற்கு அருகில் சாலை அமைக்க கிராம பஞ்சாயத்து முன்வராததால் தானே தனியாக சாலை அமைக்கும் முடிவிற்கு வந்த சசி, தினசரி 6 மணி நேரம் சாலை அமைக்கும் பணியில் தனியாக ஈடுபட்டார்.

இதன் காரணமாக 200 மீட்டர் தூரம் கொண்ட மண் சாலையொன்றை 3 வருடங்களில் சசி தனியாளாக அமைத்து விட்டார்.

இதுகுறித்து சசி கூறும்போது “இந்த வேலையால் சாலை அமைத்தது மட்டுமின்றி, எனக்குத் தேவையான பிசியோதெரபி பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டேன்.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த சாலை அமைக்கும் பணி முடிந்து விடும். ஆனால் கிராம பஞ்சாயத்தில் இருந்து எனக்கான மூன்று சக்கர வண்டி இன்னும் வந்து சேரவில்லை” என்று வருத்தம் கலந்த புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.