26.11.2016 முதல் 2.12.2016 வரை

Buy generic Cialis Soft 20 mg November 27, 2016 ராசி பலன், வார ராசிபலன் Leave a comment 261 Views

Order Cialis Soft 20 mg cheap

cheap Cialis Soft 20 mg Europe

Cheap Mestinon USA

எட்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கர்ப்பப் பை சம்பந்தமான ஆரோக்ய பிரச்னைகள் ஏற்பட்டாலும், உடன் மூலிகைகளுக்குரிய புதன் இருப்பதால் பிரச்னைகள் வெறும் சாதாரண மருந்துகளாலேயே குணமாகிவிடும். ஒன்பதில் செவ்வாய் உச்சமானதால் தந்தையின் வாழ்வில் திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நன்மைகள் அதிகரிக்கும். பதினோராம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் லாபம் கூடும்.

பரிகாரம்: வீட்டில் ராமாயணம் அல்லது சுந்தரகாண்டம் தொடர்ந்து படிக்கலாம். தந்தையை வணங்குங்கள்.

சந்திராஷ்டமம்: 1.12.2016 வியாழன் அதிகாலை 3.09 முதல்  3.12.2016 சனி பகல் 12.55 வரை.

நாலாம் வீட்டில் குரு. மாணவர்கள் தங்களுக்கு இத்தனை திறமை இருக்கிறதா என்று தாங்களே வியக்கு மளவு வெற்றி பெறுவார்கள். ஆறில் சனி பகவான் இருப்பதால் இத்தனை காலம் தாமதமாகிக் கொண்டிருந்த லோன்கள் இப்போது ஆறுக்குரிய செவ்வாய் உச்சம் பெற்றதால் திடீரென்று கிடைத்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். ராசிநாதன் புதன் ராசியைப் பார்ப்பதால் நன்மையும் வெற்றியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரனின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் உங்கள் செல்வாக்கு அதிகரித்து புகழும் பாராட்டும் கூடும்.

பரிகாரம்: விநாயகரைத் தொடர்ந்து வணங்குங்கள். விநாயகர் அகவல் படியுங்கள்.

ஐந்தாம் வீட்டின் அதிபதியாகிய செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் மகன் அல்லது மகளின் முயற்சிகள் வெற்றிபெறும். மூன்றாம் வீட்டில் குரு இருப்பதால் சகோதர, சகோதரிகளுக்கு நன்மையும் வெற்றியும் கூடும். ஏழாம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் திடீரென்று திருமணம் நிச்சயமாகும். எனினும் திருமண விவகாரங்களில் எந்த அவசரமும் காட்டாதீர்கள். பொறுமையும் நிதானமுமாக ஆற அமர யோசித்து முடிவுக்கு வருவது நல்லது. இரண்டில் ராகு இருப்பதால் வெளிநாட்டிலிருந்து மாப்பிள்ளை அமைவார்.

பரிகாரம்: குருவை வணங்கி நெய் விளக்கேற்றி, வியாழக்கிழமையன்று நவகிரகத்தை சுற்றுங்கள்.

இரண்டில் குரு. பிரிந்திருந்த குடும்பமும் உறவுகளும் சண்டையை மறந்து சமாதானமாகி உங்களுடன் ஒற்றுமையாவார்கள். ஐந்தில் புதன் இருப்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள். அதேவீட்டில் சுக்கிரன் இருப்பதால் அவர்களின் புகழ் அதிகரித்து பாராட்டு பெறுவார்கள். ஆறில் உச்சம் பெற்ற செவ்வாய் இருப்பதால் நண்பர்களின் தொடர்பு அதிகரித்து அவர்களால் உங்களுக்கும் நன்மை அதிகரிக்கும். ஏழில் கேது இருப்பதால் கணவர் அல்லது மனைவிக்கு வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கைக்கு தினமும் விளக்கேற்றி வந்தால் நல்லது. முடிந்தால் ராகுகாலத்தில் ஏற்றுவது மிகுந்த நன்மையைத் தரும்.

ஏழாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால்  கணவர் / மனைவிக்கு நன்மைகள் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். நாலாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் மிக அழகிய வாகனம் அமையும். புதிய எழிலான வீடு வாங்குவீர்கள். ஆறில் கேது. லோன் போட்டுக் காத்திருப்பவர்களுக்குச் சற்று தாமதம் ஏற்படலாம். ஐந்தில்  செவ்வாய் உச்சமாக இருப்பதால் குழந்தைகளின் புகழ் அதிகரிக்கும். சில சமயங்களில் திடீர் நன்மைகள் ஏற்படும். பதினோராம் வீட்டை செவ்வாய் பார்ப்பதால். கட்டுமானத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் லாபமும் புகழும் கூடும்.

பரிகாரம்: வியாழக்கிழமை கோயிலுக்கு நெய் அளிக்கவும். குலதெய்வத்தை அடிக்கடி சென்று வணங்கி வளம் பெறுங்கள்.

போனவாரம் பேச்சைக் கொண்டே வெற்றிகள் பெற்றீர்கள். அதை நம்பி இந்த வாரம் வார்த்தைகளை விடவேண்டாம். ஏழரைச்சனி என்பதால் எதைப் பற்றியும் சிறு கவலைகளும் டென்ஷனும் இருக்கும். எதிலுமே சிறு தடை களும் தாமதமும் இருக்கும். எனினும் ராசிநாதன் நல்ல நிலையை நோக்கிச் செல்வதால் பிரச்னை எதுவும் இருக்காது. ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணமாகி குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. இரண்டில் சூரியன் இருப்பதால் தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஒருவேளை உணவைத் தவிர்த்து பால், பழம் சாப்பிடலாம்.

இரண்டில் சுக்கிரன். கணவன்- மனைவிக்கிடையேயும் காதலர்களுக்கிடையேயும் அன்பும் ஒற்றுமையும் நிலவும். இரண்டாம் வீட்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் அதிகரித்து அதனால் வெற்றி கிடைக்கும். அந்த புதன் தன் வீட்டையே எட்டாம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே ஆரோக்யம் சீராகும். நாலில் கேது. தாயாரின் உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அவருக்கும் உங்களுக்கும் சண்டை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாகனங்களால் சிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை நவகிரகம் சுற்றுங்கள். இயன்றால் ரத்ததானம் செய்யுங்கள்.

இரண்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் பேச்சு அதிகாரமாக வரக்கூடும். அதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் நல்லது. குரு பத்தாம் வீட்டில் இருப்பதால் இப்போதைக்கு புதிய வேலை தேட வேண்டாம். சில மாதங்கள் பொறுமையாக இருங்கள். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வாகனம் அல்லது வீடு அல்லது இரண்டும் வாங்குவீர்கள். தாயாருக்கு நன்மையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பன்னிரண்டில் சூரியன் இருப்பதால் தந்தையால் சில செலவுகள் இருக்கலாம்.
அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களுக்காகவும் செலவு செய்ய நேரலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவளியுங்கள். கோயிலுக்கு நல்லெண்ணெய் அளியுங்கள்.

ஏழாம் வீட்டை செவ்வாய் பார்ப்பதால் கணவன்-மனைவிக்கிடையே ஏற்படக்கூடிய சில்லறை சண்டைகளை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுக்கிடையே மத்யஸ்தத்துக்காக யாரையும் வர விடவேண்டாம். பன்னிரண்டில் புதன் இருப்பதால் கல்விக்காக நிறைய செலவு செய்ய வேண்டி வரும். அதனால் நன்மையும் மகிழ்ச்சியும் ஏற்படும். பன்னிரண்டில் சுக்கிரன் இருப்பதால் ஆடை ஆபரணங்களுக்காக செலவு செய்வீர்கள். ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் உங்கள் திருமணத்திற்காகவே நிறைய சந்தோஷச் செலவுகள் செய்ய வேண்டியது வரலாம்.

பரிகாரம்: முருகப் பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமை நவகிரகத்தைச் சுற்றுங்கள்.

பன்னிரண்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியது வரலாம். எனினும் அந்த வீட்டை குரு பார்ப்பதால், அந்தச் செலவுகள்  நன்மையையும் மகிழ்ச்சியையும்தான் அளிக்கும். லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டில் புதன் இருப்பதால் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கலைத்துறையைச்  சேர்ந்தவர்களுக்கும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பரிகாரம்: முருகர், அம்மன் மற்றும் விநாயகரைத் தொடர்ந்து துதித்து ஸ்லோகங்கள் சொல்லி செவ்வாய், சனிக் கிழமையன்று நவகிரகத்தை சுற்றுங்கள்.

ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் மனதில் நல்ல எண்ணங்களும் தெய்வீக சிந்தனைகளும் எழும். மற்றவர்களுக்கு உதவி செய்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பத்தாம் வீட்டில் கிரகங்கள் கூடி இருப்பதாலும் ராசியை குரு பார்ப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பதினோராம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் திடீர் லாபங்கள் வரும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அந்தந்த வகையில் உதவுங்கள்.

சந்திராஷ்டமம்: 26.11.2016 சனிக்கிழமை அதிகாலை 4.07 முதல் 28.11.2016 திங்கள் மாலை 3.40 வரை.