2020 இல் களமிறங்குவது எப்படி என கூறும் மஹிந்த!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானங்களுக்கமைய 2020 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாம் தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் வலைத்தளம் ஊடாக அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் பட்சத்தில் அதற்கு எவ்வாறு தயாராவீர்கள் என டுவிட்டர் வலைத்தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் தேர்தலில் போட்டியிடுவது வெற்றி பெறுவதற்கே அன்றி வேண்டும் என்றே தோல்வி அடைவதற்கு அல்லவென மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் பழிவாங்கல்களை நிறுத்திவிட்டு நிதி மோசடி விசாரணை பிரிவை சட்டரீதியில் இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.