2017ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாது!

2017ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளினால் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை பசறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

2017ஆம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த வெளியிட்ட கருத்து நகைப்புக்குரியது.

2020ஆம் ஆண்டு வரையில் தேர்தல் நடைபெறாது எனவும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளினால் 2017ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாது என தெரிவித்த அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையை வேண்டுமானால் ஆட்சியை மாற்றலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.