163.41 காரட் வைரம் ஏலத்திற்கு!

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 163.41 காரட் வைரம் இன்று ஏலத்திற்கு வந்தது. ஏலமிடப்படும் உலகின் மிகப்பெரிய மாசற்ற வைரம் இதுவாகும். இந்த வைரம் சுமார் 165 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 222.47 கோடிக்கு ஏலத்தில் விலை போனது.

மத்திய ஆப்ரிக்காவின் அங்கோலாவில் 2016ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் வெள்ளை நிறத்தில் உள்ளது. 10 வைரத்தை வெட்டும் கலைஞர்கள் இதனை அழகாக வடிவமைத்துள்ளனர்.

ஆர்ட் ஆஃப் கிரிசோகோனோ (Art of Grisogono) என்ற ஆடம்பர நெக்லசில் இந்த வைரம் பதிக்கப்பட்டிருந்தது. தற்போது, இது தனியே எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.