16 வயது மாணவனின் அநியாயச்சாவு..!!!!

பாதுக்க பகுதியில் கற்குழியில் சிக்குண்டு பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

பாதுக்க மிரியகல்ல பகுதியை சேர்ந்த 16 வயதுடைய, ஏ பி ஜனக்க குமார என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் கடந்த 19 ஆம் திகதி குறிதத மாணவர் தனது காதலியுடன் ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தற்காலிகமாக வசித்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த மாணவியின் உறவினர்கள் மாணவரின் வீட்டிற்கு சென்று பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.

 

குறித்த மாணவர் வீட்டில் இல்லாமையினால் அவர்கள் தித்தெனியாவில் உள்ள அவரின் நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

குறித்த மாணவர் நண்பரின் வீட்டிலும் இல்லாமையினால் அவர்கள் அங்கு பதற்றத்தினை தோற்றுவித்ததோடு, சம்பவம் தொடர்பில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் உயிரிழந்த பாடசாலை மாணவர் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

எனினும் குறித்த பாடசாலை மாணவர் வீடு திரும்பவில்லை. காரணம் தன்னை கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் நண்பர் பணிபுரியும் கற்சாலை ஒன்றில் மறைந்திருந்துள்ளார்.

 

மறைந்திருந்த நிலையில், கற்குவாரியின் அருகிலிருந்த கல்லிலிருந்து வழுக்கி விழுந்து கற்குழிக்குள் அகப்படட்தனை தொடர்ந்து அவர் பாரிய சத்தத்துடன் தன்னை காப்பாற்றுமாறு உதவி கோரியுள்ளார்.

 

அயலவர்கள் குறித்த இடத்திற்கு செல்வதற்கு முன்னர் பாடசாலை மாணவர் மரணத்தை தழுவியுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.