கண் கொடுத்து கண் திறந்தார் அஸ்வின்!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக திகழும் அவர் கடந்த ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. வீரர் விருதுக்கு தேர்வானார்.

201701081117025433_cricketer-ashwin-pledges-to-donate-eyes_secvpf-gif

சிறந்த டெஸ்ட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என இரண்டு ஐ.சி.சி. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள அஸ்வின் தனது கண்களை தானமாக செய்வதாக அறிவித்துள்ளார்.

ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பங்கேற்று தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள் என்று அஸ்வின் தனது விழிப்புணர்வு பிரசாரத்தில் ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.

ஏற்கனவே அவர் 100 சதவீத வாக்கு பதிவுக்கான தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

இது குறித்து அஸ்வின் கூறும்போது, ‘கண்தானம் செய்வது என்பது எனது மனைவி பிரித்தியின் கனவாகும். எனது ரசிகர்களும் இதை பின்பற்றி கண்தானம் செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் உள்ள திருப்தி வேறு எதிலும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இதை பின்பற்ற வேண்டும்‘ என்றார்.