14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

திஸ்ஸமஹாராம, மாகம பிரதேசத்தில் ‘கூட்டு வன்புணர்வு’க்கு ஆளான சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20, 22 வயதுடைய இளைஞர்கள் இணைந்து சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு பின்னால் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுள்ளார்.

இதன்போது, வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டு சிறுமியை காப்பாற்றி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் யால காட்டுப் பகுதியில் மறைந்து இருந்தபோது, அவர்களை பிடித்த மக்கள் கடுமையாக தாக்கி, பிவீரவில பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனையடுத்து, சந்தேக நபர்களான மூன்று இளைஞர்களும் திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மூன்று இளைஞர்களும் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.