11 ஆயிரம் கண்காணிப்பாளர்களின் மத்தியில் சூடு பிடித்துள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

கபே அமைப்பு 5 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும், பெவ்ரல் அமைப்பானது 4 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும், 2 ஆயிரத்து 500 நடமாடும் கண்காணிப்பாளர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

அதேநேரம், வேட்புமனுத் தாக்கல்செய்யப்பட்ட தினத்திலிருந்து நேற்று முன்தினம் 7ஆம் திகதி நள்ளிரவு வரை 322 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றன என்று கபே அமைப்பும், 849 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பெவ்ரல் அமைப்பும் சுட்டிக்காட்டியுள்ளன.

இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. மேலும், கடந்த காலங்களைப் பொறுத்தவரை அதிகமான வேட்பாளர்கள் இம்முறை களமிறங்கியுள்ளபோதிலும் குறைவான வன்முறைச் சம்பவங்களே நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.