103 வயது பாட்டியின் கோலாகல பிறந்தநாள் கொண்டாட்டம்..!!!

திருப்பூரைச் சேர்ந்த 103 வயது பாட்டி ராமாத்தாள் தனது 5 தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடினார். பல ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட 2 வயது இளையவரான ராமசாமியை மணமுடித்த ராமாத்தாள், திருப்பூர் மாவட்டம் ஆணைப்பாளையம் கல்லூரி சாலையில் வசித்து வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன் கணவர் ராமசாமி இறந்ததும் இரண்டாவது மகளின் வீட்டில் வசித்து வருகிறார் ராமாத்தாள்.

கடந்த புதன்கிழமை 103வது வயதை எட்டி ராமாத்தாளுக்கு 5 தலைமுறையைச் சேர்ந்த 4 பெண்கள் பிறந்தனர். இவர்கள் வழியே 11 பேரப்பிள்ளைகள், 12 கொள்ளு பேர பிள்ளைகள், எள்ளு பேர பிள்ளைகள் கூடி பிறந்தநாள் கொண்டாடினர். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 250 பேரில் 42 பேர் பாட்டியின் சொந்தக்காரர்கள். வந்த அத்தனை பேரையும் ஞாபகத்துக்குக் கொண்டுவந்து அன்போடு பேசிய பாட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.