10.12.2016 முதல் 16.12.2016 வரை

buy Cialis Soft Sweden December 11, 2016 ராசி பலன், வார ராசிபலன் Leave a comment 174 Views

buy Cialis Soft 20 mg France

buy Cialis Soft USA

http://www.hogsapothecary.com/Buy-generic-Cipro Buy generic Cipro

Buy Cialis Soft 20 mg Over The Counter

ஒன்பதாம்  வீட்டில் செவ்வாய் இருப்பதால் தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சி ஒன்று நிகழும். அது நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும். பத்தாம் வீட்டில் கேது இருப்பதால் உங்கள் அறிவாற்றலால் உத்யோகம் சிறக்கும். ராசியை சனி பார்ப்பதால் அதிகம் உழைக்க வேண்டியது வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற உணர்வு  ஏற்படும்.  ஏழாம் வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமோ வன்மையான சண்டையோ வராமல் பார்த்துக் கொண்டால் இருவரும் பிழைக்கலாம்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு உணவு, உடைகள், குடை , காலணி, போர்வை போன்றவற்றை தானமாக தருவது நன்மை தரும்.

ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன்   மனைவிக்குள் மகிழ்ச்சியான ஒற்றுமை நிலவும். காதல் திருமணம் வெற்றிகரமாக முடியும். ஐந்தாம் வீட்டில் புதன் இருப்பதால் குழந்தைகள் புத்திசாலித்தனமான செயல்கள் செய்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். மற்றவர்களின் கல்விக்கு உதவி செய்து புண்ணியமும்  பாராட்டும் பெறுவீர்கள். எட்டாம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும். இதன் காரணமாக ஆரோக்யத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள் கூடாது. பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பரிகாரம்:

முருகருக்கு அர்ச்சனை செய்யவும். செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பை தானமாக கொடுக்கவும்.

ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் நண்பர்களுடன் நல்ல முறையில் நட்பு நிலவும். குறிப்பாக எதிர்பாலினத்து நண்பர்கள் நன்மை செய்வார்கள். ஒன்பதை குரு பார்க்கிறார். தந்தைக்கு லாபங்கள், தந்தையால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். இதுவே அதிர்ஷ்ட வீடு என்பதால் உங்களுக்கும் திடீரென்று அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும். ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம் சற்று மெதுவாக இருக்கவே வாய்ப்புள்ளது. எனினும் சனி, செவ்வாய் பரிவர்த்தனை காரணமாக எந்தத் தொல்லையும் வந்த வேகத்தில் சரியாகும்.

பரிகாரம்:

புற்று இருக்கும் கோயிலுக்குச் சென்று பால் வார்த்து வழிபடவும்.

ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகளை புகழ் பெற வைப்பார். குறிப்பாக கற்பனை சார்ந்த  துறைகளான நடனம், நாட்டியம், ஓவியம் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் மிகச் சிறந்து விளங்குவார். நான்கில் புதன் இருப்பதால் பசுமை சூழ்ந்த வீடு வாங்க வாய்ப்புள்ளது அல்லது தோப்பு துறவு அல்லது எஸ்டேட் வாங்குவீர்கள்.  குரு பகவான் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பேச்சினால்  நன்மை  அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்கள் சேருவார்கள். மேடைப் பேச்சாளர்களும் அரசியல்வாதி களும் மழைபோல் பொழிந்து நன்மை பெறுவீர்கள்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமையன்று  நவகிரகத்தில் உள்ள சூரியனுக்கு சிவப்பு நிறப்பூ வைத்து வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள்.

ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் புகழ் அடைவார்கள்.  ராசியின் மீது குரு பகவான் அமர்ந்திருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்கு புரிய வைக்கும்.  பதினோராம் வீடாகிய லாப ஸ்தானத்தைச் செவ்வாய் பார்ப்பதால் மருத்துவர்களுக்கும் கட்டிடத்  துறையில் இருப்பவர்களுக்கும்  லாபம் பெருகும்.

பரிகாரம்:

ஞாயிற்றுக் கிழமை கோதுமையால் செய்த இனிப்பை கோயிலில் பக்தர்களுக்கு கொடுங்கள்.

சந்திராஷ்டமம்:

10.12.2016 சனிக்கிழமை காலை 4.52 மணி முதல் 12.12.2016 திங்கள் காலை 7.16 மணி வரை.

இரண்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தாயார் கல்வி, வாகனம் இவற்றைக் குறிக்கும் நான்காம் வீட்டினை முழு சுப கிரகமாகிய குரு பகவான் பார்க்கிறார்.  நீங்கள் புது மனை புகுவிழா செய்யப் போகிறீர்கள். எட்டாம் வீட்டிற்கு  குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது கேட்கலாம். ராமாயணம் படிக்கவும்.

சந்திராஷ்டமம்:

12.12.2016 திங்கள் காலை 7.17 மணி முதல் 14.12.2016 புதன் காலை 9.44 மணி வரை.

நான்கில் கேது இருப்பதாலும் ராகு பார்ப்பதாலும் வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்டவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். குரு பகவான் நல்ல நிலையில் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் லாபம், சம்பாத்தியம், நிதி நிலைமை  விஷயங்களில் பிரச்னையே இருக்காது. நான்காம் வீட்டில் கேது இருப்பதால் கடன் பெற்று புதிய வீடு வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

சனிக்கிழமை விரதம் இருக்கலாம். ஒரு வேளை சாப்பாடும் ஒரு வேளை சமைக்காத பண்டங்களும் சாப்பிடுங்கள்.

சந்திராஷ்டமம்:

14.12.2016 புதன் காலை 9.45 மணி முதல் 16.12.2016 வெள்ளி பகல் 1.05 மணி வரை.

பன்னிரண்டாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பயனுள்ள செலவுகளாகவே இருக்கும். நாலாம் வீட்டிற்கு குரு  பகவானின் அருட் பார்வை புனிதமாக இருப்பதால் புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கட்டாயம் அவருக்கு உண்டு.

பரிகாரம்:

வியாழக்கிழமையில் நவகிரகம் சுற்றி நெய் விளக்கேற்றி குரு ஸ்லோகங்கள் சொல்லுங்கள்

சந்திராஷ்டமம்:

16.12.2016 வெள்ளி பகல் 1.06 மணி முதல்  18.12.2016 ஞாயிறு மாலை 6.11 மணிவரை.

இரண்டில்  கேதுவும்  ராகுவின் பார்வையும் இருப்பதால் குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு செல்வார்கள். ஐந்தாம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். இதுவரை தள்ளிப்போய்க் கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். ராசியை அவரே பார்ப்பதால் தொட்டதெல்லாம் வெற்றியாகவும் லாபமாகவும் முடியும். பதினோராம் வீட்டில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் லாபமும் நன்மையும் கூடும். எட்டில் ராகு இருப்பதாலும் அந்த வீட்டின் அதிபதி சொல்லும்படியாக இல்லை என்பதாலும் ஆரோக்ய விஷயத்தில் அதீத கவனம் கட்டாயம்  வேண்டும்.

பரிகாரம்:

செவ்வாய்க் கிழமைகளில் இளைஞர்கள் ரத்த தானம் செய்வது சிறந்த பரிகாரம். நவகிரக சந்நதியில் துவரம் பருப்பை தானமாக அளியுங்கள்.

குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதால் சுபச்செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக செலவழிப்பீர்கள். அதனால் நன்மையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். உச்சமான செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆனால், அவரின் பலம் காரணமாக அவை தீமை செய்யாது. ஒன்பதாம் வீட்டில் சூரியன் இருப்பதால் தந்தைக்கு  தற்போதைக்கு சில சிறிய பிரச்னைகள் இருக்கலாம். அதெல்லாம் இந்த வாரத்தோடு சரியாகும்.

பரிகாரம்:

புதன் கிழமை பச்சை நிறத்தில் பரிசுப் பொருட்கள் வாங்கி மாணவர்களுக்குக் கொடுங்கள். படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யுங்கள்.

ஒன்பதில் சுக்கிரன். தந்தை புகழ் பெறுவார்.  ஒன்பதில் சனி இருப்பதால் உங்கள் தந்தையின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். இதனால் அவர் புகழ் பெறுவார். லாபத்தைக் குறிக்கும் பதினோராம் வீட்டில் உச்சம் பெற்ற செவ்வாய் இருப்பதால் வாய்ப்புக்கள் தேடித்தேடி வந்து  நிறைய  லாபம் கொடுக்கும். மேலும், செவ்வாய் சற்றும் எதிர்பாராத திடீர் நன்மைகளையும் அளிப்பார். பத்துக்குரிய குரு ஏழில் அமர்ந்து தன் வீட்டைப் பார்ப்பதால் உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புது வேலை தேடுபவர்களுக்கு அதிக முயற்சியின்றி சுலபமாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

பரிகாரம்:

சனிக்கிழமை யாருக்காவது உணவு அளியுங்கள். காகங்களுக்கு பிரெட், பலகாரம் போன்றவை அளிக்கலாம்.