08 மாவட்டங்களுக்கான தபால் மற்றும் வீடுகளுக்கான வாக்களிப்பு அட்டைகள் இன்று விநியோகம்…!!!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகளை இன்றைய தினம்  08 மாவட்டங்களுக்கு வழங்குவதற்கு  நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், ஏனைய மாவட்டங்களுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகளை நாளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.