“ஹிப்ஹாப் தமிழா” ஆதிக்கு படப்பிடிப்பின் போது விபத்து!!

பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்து, மற்றுமொரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆதி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான பார்த்திபன் தேசிங்கு இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதில், ஹாக்கி வீரராக நடிக்கிறார் ஆதி. இதற்காக முறைப்படி ஹாக்கி பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இருந்தாலும், படப்பிடிப்பின்போது ஆதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சைக்குப் பிறகே அவரால் நடிக்க முடியும் என்கிறார்கள்.