ஹற்றனில் போதைக் கலந்த பாணி விற்ற மருந்தகம் கண்டுபிடிப்பு!

ஹற்றன் நகரில் போதை ஏற்படக்கூடிய  பாணியை(சிரப்) விற்பனை செய்த  மருந்தகத்தை  தலவாக்கலை அதிரடி படையினரும்  நுவரெலிய உணவு ஒளடத பரிசோதகர்களும் சுற்றிவளைத்துள்ளனர்.

அனுமதியின்றி மேற்படி பாணி விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே நேற்றையதினம்  மாலை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மருந்தக உரிமையாளருக்கு  எதிராக வழக்கு பதிவு செய்து ஹற்றன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக நுவரெலிய மாவட்ட  உணவு ஒளடத பரிசோதகர் சரத் விஜேதுங்க தெரிவித்தார்.